ஆசிரியர்கள், அதிபர்களை சேவைக்கு அழைக்கும் முடிவில் மாற்றம்

513

அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் கல்விசார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு வீட்டிலிருந்து கடமையாற்றும் காலத்தில் ஒன்லைன் முறை அல்லது பிற மாற்று முறைகளைப் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நேற்று முன்தினம் (07) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், தங்கள் சம்பளப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என குறித்த சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here