ஆப்கானிஸ்தானில் 3 நாட்களில் 5 மாகாணத் தலைநகரை கைப்பற்றிய தாலிபான்கள்

581

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் ஞாயிறன்று ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசுடன் தாங்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ளவில்லை என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதிற்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தியப் படைகள் பெருமளவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றி வருகிறார்கள்.

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

அதற்கு முன்பு தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here