உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விவாதத்திற்கு தயார் – ஹரின் பெர்ணான்டோ

512

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பகிரங்க தொலைக்காட்சி விவாதத்துக்கு வருமாறு அரசாங்கத்தின் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஏற்றுக்கொண்டார்.

இந்த விவாதத்துக்கு தாமும், பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் வரத்தயார் என்றும் ஹாின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற த்தில் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஹரின் பெர்ணான்டோ கருத்துக்களை வெளியிட்டபோதே, பகிரங்க விவாதத்துக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டு எதிர்கட்சியினால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்ற வேளையில் கொழும்புக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தேசப்பந்து தென்னக்கோன் விடுமுறையில் சென்றிருந்ததாக ஹரின் பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.

இந்தநிலையில் மாலு மாலு விருந்தகத்தில் தங்கியிருந்த பொலிஸ் அதிகாரி யார் என்பதும், சஹ்ரானுடன் தொடர்புடைய சொனிக் சொனிக் என்ற அதிகாரி யார் என்ற விடயமும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் ஹரின் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here