பால் மா மீது விதிக்கப்படும் வரி நீக்கம்!  விலை அதிகரிக்க அனுமதியில்லை!!

623

இறக்குமதி செய்யப்படும் பால்மா மீதான வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சந்தையில் தற்போது பால்மாவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்ததை அடுத்து சந்தையில் பால்மா பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில், பால்மா இறக்குமதியின் போது விதிக்கப்படும் வரியை நீக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுமார் 175 ரூபா வரி விலக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here