follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று!

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று!

Published on

இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 10.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக தேசிய போர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார். இதனையடுத்து விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

அதேநேரம் இராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள்,  ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறவுள்ளதோடு, நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெறவுள்ளது.

இதேவேளை குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரி விகிதங்கள் குறித்து டிரம்பின் விசேட அறிவிப்பு

ஜூலை 9 ஆம் திகதியுடன் வரிச்சலுகை காலாவதியாகும் நிலையில், அதற்கு முன் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறித்து...

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...