இறக்காமத்தில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய அவதானம்

440

கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட செயலாளரினால், குறித்த இடம், உடல்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமானதென அறியப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்யப்படும் ஓட்டமாவடி பகுதியில் மேலும் 500 உடல்கள்; அளவில் அடக்கம் செய்யக்கூடிய நிலைமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்காக இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here