58 சடலங்களை வைக்க கூடிய கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 77 சடலங்கள் தேக்கம் : 4 வருடமாக 40 சடலங்கள் தேக்கம்

866

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தேங்கியுள்ள இதுவரை அடையாளம் காணப்படாத 40 உடல்களை அடக்கம் செய்வதற்கான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டு முதல் குறித்த உடல்களை அடையாளம் காணப்படாது இவ்வாறு தேங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 உடல்கள் மாத்திரமே வைத்திருக்க கூடிய வசதிகள் உள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது 77 உடல்கள் தேங்கியுள்ளதாக நேற்று முன்தினம் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவற்றில் 21 கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களாகும். 77 உடல்களில் 40 உடல்கள் 2017 ஆம் ஆண்டு முதல் தேங்கியுள்ள நிலையில் அவை, ஆள் அடையாளம் உறுதிப்படுத்தப்படாதவை என மருதானை பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமையை அடுத்து குறித்த உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here