ஊதிய முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுமா? இல்லையா தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சங்கங்கள் தெரிவித்துள்ளன.
செவிலியர்கள், மருத்துவப் பணிகளுக்கு துணைபுரியும் ஊழியர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள், குடும்ப சுகாதார சேவைகள் உட்பட பல சுகாதார சங்கங்களின் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள் என சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.