follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்ட சுதந்திர தினம் (படங்கள் )

கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்ட சுதந்திர தினம் (படங்கள் )

Published on

நாடு முழுவதும் இன்றைய தினம் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கடற் தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டித்துள்ளனர்.

இந்திய கடற் தொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் கடற் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி – சுப்பர்மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு நீமன்றம் தடைவித்திருந்த நிலையில், நேற்று மாலை பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இன்றைய தினம் வடமராட்சி – சுப்பரமடம் பகுதியில் சுதந்திர தினத்தை கருப்பு நாளாக அனுஷ்டித்த கடற் தொழிலாளர்கள், உயிரிழந்த மீனவர்களுக்கும் அஞ்சலியும் செலுத்தினர்.

மேலும், நூற்றுக்கணக்கான கடற் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....