follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1குறைந்த கேள்வி நிலவுமாயின் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் – மின்சார சபை

குறைந்த கேள்வி நிலவுமாயின் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் – மின்சார சபை

Published on

குறைந்த மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றைய தினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரக் கேள்வி நிலவியமையால், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறிருப்பினும், இன்றைய தினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு உலை எண்ணெய் அவசியமாகும் என மின்சார சபையின் பேச்சாளரான, மேலதிக பொது முகாமையாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்தார்.

தற்போது எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்புக்கு 280 மெகாவோட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.

இதேவேளை, கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்காமையானது, பிரச்சினையானதாகும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாகவும்...