follow the truth

follow the truth

May, 7, 2025
Homeஉள்நாடுசுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

Published on

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவசர நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் போன்றோருக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான நடவடிக்கைகளில் தலையிடாமல் கொரோனா நோயாளர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் ஒதுக்குவதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைகின்ற நோயாளர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக இடைநிலை மருத்துவமனைகளுக்கு அனுப்புவதன் மூலம் பிரதான மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக புதிய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலக வங்கித் தலைவர் ஒருவர் 20 வருடங்களுக்கு பிறகு இலங்கை வருகிறார்

உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார். இதனை உலக வங்கி ஒரு அறிக்கை...

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று

புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் இரகசிய வாக்கெடுப்பு இன்று (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் செய்தியளித்ததாவது, இன்று சிஸ்தீன் தேவாலயத்தில்...

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டம் - நாவலப்பிட்டிய நகர சபை தேர்தல் முடிவுகள்.    தேசிய மக்கள் சக்தி - 2,217 வாக்குகள் -...