follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP104 அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம்

04 அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம்

Published on

4 அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசின் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதற்கமைய வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கும் தினேஸ் குணவர்தனவுக்கு கல்வியமைச்சுப் பதவியும் எரிசக்தி அமைச்சராக பதவி வகிக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மின்சக்தி அமைச்சராகவும் கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸூக்கு வெளிவிவகார அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளதாக அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர்...