தற்சமயம் சந்தையில் சீமெந்துபோதுமான அளவு கிடைப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதனைப்போல , கோதுமை மா உள்ளிட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் , சந்தையில் சீமெந்தைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்தும் சிரமம் இருப்பதாக மேசன் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு சீமெந்து கிடைத்தாலும் விலைகளை அதிகரித்து விற்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.