follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவிளையாட்டுதொடரை வென்றது இந்தியா

தொடரை வென்றது இந்தியா

Published on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டீ -20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டீ -20
தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் வென்றது.

கொல்கத்தா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தலா 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரான் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 28 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரிஷப்பந்த் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டீ -20 போட்டி, நாளை கொல்கத்தா- ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...