follow the truth

follow the truth

September, 13, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!

Published on

அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது புதிய தயாரிப்பான Beechcraft King Air 360ER விமானத்திற்கான 11 மில்லியன் உடன்படிக்கையை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த விமானம் வெளிநாட்டு இராணுவ விற்பனை உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதன் தயாரிப்பு 2025 செப்டம்பருக்குள் நிறைவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்புக்கு பின்னர் இந்த விமானம் அமெரிக்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அது இலங்கை விமானப்படைக்கு வழங்குவதற்கு முன்னர் உணரிகள்( sensors) நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட விமானத்திற்கான பறக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் புதுமையான மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் இந்த விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

46.6 அடி (14.2 மீட்டர்) நீளமும், 14.3 அடி (4.35 மீட்டர்) உயரமும் கொண்ட பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ER (Beechcraft King Air 360ER) விமானம், விமானியின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,.

பயணிகள் மற்றும் சரக்குகளுக்கு இடமளிப்பதற்கும், விமான அவசர நோயாளர் காவு வாகனமாக செயற்படுவதற்கும் ஏற்ற உட்புறங்களை வழங்கும் வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜெட் விமானம் அதிகபட்சமாக 3,345 கிலோமீட்டர்கள் (2078.4 மைல்கள்) 11 பேருடன் பயணிக்க முடியும்.

அத்துடன் இது மணிக்கு 560 கிலோமீட்டர்கள் (348 மைல்கள்) அதிகபட்ச வேகத்துடன் மற்றும் அதிகபட்ச 35,000 அடி (10,668 மீட்டர்). உயரத்தில் பறக்கக்கூடியது.

Textron Aviation 350ER அரச, இராணுவ மற்றும் வணிக நோக்கங்களுக்காகவும், வான்வழி ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காகவும் தயாரிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், விமானம் ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்றுக்கொண்டது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 பெப்ரவரியில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

2025 பெப்ரவரிக்குள் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின்...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்ற உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை இன்று (13) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம்...