இலங்கை மத்திய வங்கியின் உத்தரவையடுத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாதென அரசாங்க வங்கிகள் அறிவித்துள்ளமையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே 75,000 கோடி ரூபா கடன் சுமையுடன் இருப்பதனால் அதற்கு மேலதிமாக கடன் வழங்க முடியாது என மக்கள் மற்றும் இலங்கை வங்கிகள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே அரச வங்கிகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 37,000 கோடி ரூபா செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலும் 1036 கோடி ரூபா கடன் கோரிய போதிலும் அந்த கோரிக்கையை அரச வங்கிகள் நிராகரித்துள்ளன.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மொத்தமாக 11000 கோடி ரூபா நட்டமடைந்துள்ளதாகவும், நாளாந்தம் 55 கோடி ரூபா நட்டமடைவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.