நாராஹென்பிட்டி ETF அலுவலகத்திற்கும் பூட்டு

711

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் (ETF) நாராஹென்பிட்டி தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியில் குறித்த அலுவலகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் சேவைகள் இன்று 17ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர் விண்ணப்பங்களை தபால் ஊடாகவோ அல்லது அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பெட்டியிலோ இடுமாறு குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் டீ.ஜீ.ஜீ.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here