follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

Published on

எதிர்வரும் 01.03.2022 நிகழவிருக்கும் சிவராத்திரி விரத புண்ணியகால நன்னாளை முன்னிட்டு, ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் இந்த நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம், தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களின் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இளம் இந்துச் சிறார்களின் ஆன்மிக உணர்வுகளை மேன்மையுறச்செய்து, கலை நிகழ்வுகள் மூலமாக ஆக்கத்திறன் ஆளுமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுப்பதோடு, மேன்மேலும் அவர்களுக்கு ஊக்கம் நல்கும் விதத்திலே பரிசில்கள் வழங்கிப் பாராட்டுதல் என்ற முக்கிய நோக்கத்தினை உடையதாகவே, மகாசிவராத்திரி விரத புண்ணிய நன்னாளை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியிலே சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சரும் கௌரவ பிரதமரின் இந்துமத இணைப்பாளர் ராமச்சந்திர பாபு சர்மா குருக்கள் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...