ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு, 350 மில்லியன் டொலர் மதிப்பிலான போர் நிதியுதவியை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்த நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்கா போர் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனின் மெலிமொபோல் நகரத்தைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன், தலைநகர் கிவ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.