கடைகளுக்குப் பூட்டு வர்த்தகர்கள் தனித் தீர்மானம்!

741

கொரோனா தொற்றின் அபாய நிலையை கருத்திற்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றை தாமாகவே முன்வந்து மூடுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனடிப்படையில், பட்டபொல நகரை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு பட்டபொல கைத்தொழில் சேவை மற்றும் வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

திவுலப்பிட்டிய நகரம் மற்றும் பாதுராகொட நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன.

மரதகஹமுல நகரை ஒரு வாரமளவில் மூடுவதற்கு மரதகஹமுல ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here