புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு : பல்வேறு விடயங்களுக்கு தடை

828

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு அம்சங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையைங்கள், தசைப்பிடிப்பு நிலையங்கள் (மசாஜ் பார்லர்கள்), சிறுவர் பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி சார் நிறுவங்கள் மூடப்பட வேண்டும்.

மேலும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கடற்கரையில் ஒன்றுகூடுதல் மற்றும் நீச்சல் தடாகங்களை பயன்படுத்துவதற்கும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை தடை விதிக்கப்படுவதாக புதிய சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here