follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP13 வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்க 10 பங்காளி கட்சிகள் கோரிக்கை

3 வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்க 10 பங்காளி கட்சிகள் கோரிக்கை

Published on

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள்இ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளன.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால்இ கொரோனா நோயாளர் எண்ணிக்கை வைத்தியசாலை நிரம்பி வழியும். இதனால் வைத்தியசாலை கட்டமைப்பு உடையக்கூடும் என குறித்த 10 கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அத்துரலிய ரத்தன தேரர்,
ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணாயக்கார,
லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச,
பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில,
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா,
எக்சத் மஹஜன பெரமுனவின் தலைவர் டிரான் அலஸ்,
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜீ. வீரசிங்க,
ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் அசங்க நவரத்ன,
யுத்துகம தேசிய அமைப்பின் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குவதன் மூலம் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறையும் என இந்தக் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடு தொடர்ந்தும் திறந்திருந்தால்இ தனிமைப்படுத்தப்பட்டஇ நோயாளர்களின் அச்சத்தால் நாடு செயற்றிறனை இழக்கும் அபாயம் உள்ளதென ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம்இ மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செயற்பாட்டையும் மேம்படுத்த முடியும் என அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...