follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபொருளாதார பேரவையை நிறுவ தீர்மானம்

பொருளாதார பேரவையை நிறுவ தீர்மானம்

Published on

பொருளாதார பேரவையை வாராந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதார மீள்கட்டமைத்தல், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேரவையின் ஆலோசனைகள், வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியினால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொருளாதார பேரவையின் கட்டமைப்பு ஜனாதிபதி, பிரதமர், வர்த்தக அமைச்சர், நெடுஞ்சாலைகள் அமைச்சர், நிதி அமைச்சர், விவசாய அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோரின் அடிப்படையில் அமையவுள்ளது.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (தலைவர்)
 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
 வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன
 நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பர்னாந்து
 நிதி அமைச்சர் கலாநிதி பசில் ராஜபக்ஷ
 விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுக்கமகே
 பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன
 இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
 ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்
 திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல
 இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...