அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று (8) பாராளுமன்றத்திற்கு வருவார்கள் என பலரும் எதிர்பார்த்த போதிலும் அவர்கள் ஆஜராகவில்லை.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ள வாசுதேவ நாணயக்காரவும் நேற்று பாராளுமன்றத்திற்கு வரவில்லை.
இதற்கிடையில், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் சபையின் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இரண்டாவது முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்த அதேவேளை, புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட திலும் அமுனுகம ஆளும் கட்சியின் இரண்டாவது வரிசையில் 30ஆவது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
தோழர்கள் திலும் அமுனுகம மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு சக எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளும் கட்சியின் 73ஆவது ஆசனம் விமல் வீரவன்சவுக்கும், ஆளும் கட்சியின் 78ஆவது ஆசனம் உதய கம்மன்பிலவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.