முடக்கம் குறித்த தீர்மானம் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்

926

தீவிரமாக பரவி வரும் கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதற்கு செவிசாய்ப்பதாக கூட்டம் முடிந்து வெளியேவந்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாட்டை குறைந்தது 10 நாட்களுக்கு முடக்குமாறு அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். எனினும், எத்தனை நாட்களுக்கு நாடு முடக்கப்படும் என்பது குறித்து ஜனாதிபதி அறிவிப்பார் என்றும் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here