யுக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலப்பகுதியில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி வருமானம் மேலும் குறைவடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான ரஷ்ய நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதாலும், கப்பல் நிறுவனங்கள் அந்த நாட்டுக்கான கொள்கலன் பரிமாற்றத்தை புறக்கணித்து வருவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் இலங்கை, அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்திலும், யுக்ரைன் 18ஆவது இடத்திலும் உள்ளது.
இதன்படி, கடந்த வருடத்தில் ரஷ்யாவுக்கு 29 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 24,822 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன், யுக்ரைனுக்கு 4 மில்லியன் கிலோகிராம் தேயிலை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதுடன், அதன் மூலம் 4,279 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றிருந்தது