ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்

810

அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி ஏறிப் பயணிக்க முற்பட்ட சிலர் உயிரிழந்தமை தெரிந்ததே. விமானத்தின்கீழே சக்கரங்கள் இடையே-தரை யிறக்கும் கியர் பகுதியில்- ஏறி ஒளிந்து பயணிக்க முற்பட்ட மூவர் விமானம்மேலே கிளம்பிப் பறந்தபோது உடல் சிதறுண்டு தரையில் வீழ்ந்தனர் என்று கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சமூக ஊடகத் தளங்களில் வெளியாகி இருந் தன. அவ்வாறு வானிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவரே இளம் வீரர் ஷாகி அன்வாரி என்பது உறுதிப்படுத்தப்பட் டுள்ளது.

ஆப்கானிஸ்தான் விளையாட்டு இயக்குநரகமும்(Sports Directorate) இந்தச் செய்தியை பின்னர் உறுதிப்படுத்தியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here