follow the truth

follow the truth

December, 12, 2024
Homeஉள்நாடு22 தமிழக மீனவர்களுகளுக்கு விடுதலை

22 தமிழக மீனவர்களுகளுக்கு விடுதலை

Published on

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும் கடந்த மாதம் 24ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, அவர்களின் 2 விசைப்படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

அதனையடுத்து மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்களை மார்ச் மாதம் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் மீண்டும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது 22 மீனவர்களையும் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராக 3 குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதவான் 3 குற்றச் சாட்டுக்களுக்கும் தலா 6 மாதம் சதாரண சிறைத் தண்டணையும், 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையின் அடிப்படையில் – செய்து உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை

சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார...

முதல் தடைவயாக 200 பில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான...

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை ஆர்வம்

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie...