ஏப்ரல் 21 தாக்குதல் : கறுப்பு கொடி போராட்டம்

724

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.

அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்ற கத்தோலிக்க திருச்சபை முடிவு செய்துள்ளது.

அத்துடன் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தங்கள் வீடுகளிலிருந்து ஜெபமாலை ஓதி பிரார்த்தனை செய்யுமாறும் கத்தோலிக்க திருச்சபை வேண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here