follow the truth

follow the truth

October, 7, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தால் கோரிக்கை விடுக்க முடியாது – சபாநாயகர்

ஜனாதிபதியை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தால் கோரிக்கை விடுக்க முடியாது – சபாநாயகர்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதியை பதவி விலகுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றம் தலையிட வேண்டும் என கோரியது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு பாராளுமன்றத்திற்கு எந்தவொரு ஜனநாயக உரிமையும் கிடையாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியை ஜனநாயக வழிகளில் தீர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களே அது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வை உருவாக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தபோதும் இடைக்கால அரசாங்கத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்க எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துவிட்டன.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து பேர் உட்பட 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்ததை அடுத்து அரசாங்கத்தின் பாராளுமன்ற பெரும்பான்மை ஆட்டம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வேலை நிமித்தமாக இஸ்ரேல் செல்வோருக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக வேலை நிமித்தம் இஸ்ரேலுக்கு வரவிருக்கும் இலங்கையர்கள் தேவையற்ற அச்சத்தை...

உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் கைச்சாத்து

இந்நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் இன்று (07) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக...

“ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது பாரிய அநீதியாகும்”

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.3000 தொகையை நிறுத்தியது மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என...