கராச்சியில் அமைந்துள்ள ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 15 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் அடங்குவதாகவும், மேலும் பலர் கீழே சிக்கியிருக்கும் வாய்ப்பு இருப்பதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடியில் 40க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக் கூடியவர்களை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தின் காரணங்கள் தற்போது வரை தெரியவில்லையெனினும், கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளாக பழமை வாய்ந்தது என்பதும், அது கட்டுமான நெறிமுறைகளை பின்பற்றியதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.