காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும் நிரந்தர வைத்தியசாலைகளை நிருமாணிப்பதற்கு அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
தம்புள்ளை கண்டலம வாவியின் ஏரிப் பகுதியில் மூன்று மாதங்களாக வலப்பக்க முன்னங் காலில் காணப்படும் காயம் காரணமாக யானையின் நோய் நிலையில் தொடர்பாக கண்டறிவதற்காக நேற்று (06) கண்டலம வாவியின் தாவுல்லைக்கு வருகை தந்த போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.