இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல் மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று குருநாகலில் நடைபெற்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடைபெற்ற இந்தப் செயலமர்வில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டம், குடிவரவுச் சட்டம், மனித கடத்தல் சட்டம், பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள், பணியகத்தின் மாகாண அலுவலகங்களின் பங்களிப்பு மற்றும் பொது சேவைகள் குறித்து அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
குருநாகல் மாவட்டத்திற்குட்பட்ட கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பல அரசு அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.