நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஏனைய சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.