5,530 அரச வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையில் உள்ளது : அரசாங்கம் தெரிவிப்பு

1123

அரசுக்குச் சொந்தமான பாவிக்க முடியாத 5530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, அமைச்சரவையில் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார்.

அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உட்பட அரச நிறுவனத்திற்கு சொந்தமான 82,194 வாகனங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் 76,661 வாகனங்கள் இயங்கும் நிலையிலும் 5533 வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here