உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்

375

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனவும் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (17) ஆராதனையின் பின்னர் மேற்கொண்டனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் காலை இடம்பெற்றதுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை நினைவுகூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here