ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை நன்றி

364

நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று   நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் இந்தியா வழங்கியமைக்காக அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

நாட்டின் ஒட்சிசன் தேவையை முறையாக முன்னெடுப்பதற்காக அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் உடனடியாக 140 மெற்றிக் தொன் ஒட்சிசனை வழங்கியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எமது அயல் நட்புறவு நாடு என்ற ரீதியில் இதுதொடர்பாக இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here