சம்பள பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு – டலஸ்

692

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்வரும் வாரம் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீரமானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

சம்பளப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு சமர்ப்பித்த அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கை குறித்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here