அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சு இரங்கல்

715

முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர 2005 – 2007 மற்றும் 2015 – 2017 வரை இரண்டு முறை வெளிநாட்டு அமைச்சராக செயற்பட்டார். தனது ஈடுபாடு மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு, மதிப்புக்கள் மற்றும் மனிதாபிமான குணங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். இலங்கை தனது நாட்டின் நலன் மற்றும் அபிவிருத்தியில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் ஒருவரை இழந்துள்ளது.

இந்தக் கடினமான நேரத்தில், எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த அமைச்சரின் குடும்பத்தாருக்கு உரித்தாகட்டும். தொற்றுநோய் மற்றொரு உயிரைக் கொன்றிருப்பதுடன், இந்த முறை தனது நாட்டிற்கு சிறப்பாக சேவையாற்றிய இலங்கையின் புகழ்பெற்ற மகனின் உயிர் எடுக்கப்பட்டுள்ளது. அவர் நிப்பனவின் உயர்ந்த பேரின்பத்தை அடைந்து கொள்ளட்டும்

வெளிநாட்டு அமைச்சு

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here