நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஏழு உறுப்பினர்களுடன், இலங்கைக்கான சீன தூதுவர் ஸி சென்ஹொங் நேற்று (22) சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான, உதய கம்மன்பில, அத்துரலிய ரதன தேரர், தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, அநுர பிரியதர்ஷண யாபா உள்ளிட்ட ஏழு பேர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய முறையை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.