கொவிட் தடுப்பூசி – 3 ஆவது டோசின் தேவை குறித்து ஆராயப்படும்

685

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கொவிட் 19 வைரஸுக்கு எதிரான 3 ஆவது டோசின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் அளவில் நாட்டின் சகலருக்கும் தடுப்பூசியை ஏற்றும் பணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போது ஒரு கோடி 20 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் ஏற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 60 இலட்சத்தைக் கடந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here