follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஅஜித் ரோஹண குறித்து வெளியாகிய புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம்

அஜித் ரோஹண குறித்து வெளியாகிய புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம்

Published on

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படத்தில் இருப்பது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இல்லையெனவும், அது வேறு ஒருவரது புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது TilTok செயலியில் இருந்து பெறப்பட்ட புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை...

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

"சிறி தலதா வழிபாடு" நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைத் தரும் பக்தர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாளை(23) ஒரு...