காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு : 13 பேர் பலி (Update)

690

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்து ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சிறுவர்கள் உட்பட குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்ததை தொடர்ந்து அது தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமீது கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தில் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆப்கானியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விமான நிலையத்துக்கு வெளியே தலிபான்களும், விமான நிலையத்துக்கு உள்ளே ஆப்கன் படையினர் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில், தற்போது வெடிச்சத்தம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here