டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் : இவ்வாறு 20 பேர் அடையாளம்

683

டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல் மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வாரத்தினுள் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 20 இற்கு அதிகமானோருக்கு அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த அபாயநிலை காரணமாக, எவருக்கேனும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகள் வெளிக்காட்டும் பட்சத்தில், அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பது சாலச்சிறந்தது என வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here