மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று (10) மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.