இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகளவான உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன.
உயிரிழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் இதுவரை 220 பேர் காயமடைந்துள்ளனர்.
47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்கள், 65 வீடுகள் சேதமாக்கப்பட்டுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.