நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தில் திட்டமிட்ட குழுவினரால் வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் அரசியல்வாதிக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்று இந்த வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.
இதில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் இருந்த வாகனங்களும் எரியூட்டப்பட்டுள்ளன.
இருந்தாலும் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட நபர்களே இதனை செய்திருப்பதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் தற்போது மக்களை வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இனவாதத்தை தூண்டும் வகையில் சில தரப்பினர் முயற்சித்துள்ளனர் இந்நிலையில், இந்த சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.