கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் தொற்று உலுக்கி வந்த நிலையில் முதன்முறையாக வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
தலைநகரில் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளதாக செய்தி வௌியிட்டுள்ள அந்நாட்டு தேசிய ஊடகம், எத்தனை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்பதை வௌியிடவில்லை.
அணுவாயுத பலத்தை கொண்ட வட கொரியாவில் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.