கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் யாருக்கு பெற்றக்கொள்ள முடியும்?

1108

தற்போது வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் மூலம் 5 – 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

சரியான தகவல்கள் வழங்கப்பட்டால் மாத்திரமே அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வழங்கப்படும் தகவல்கள் உண்மையானவையா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் , அது குறித்த மேலதிக தகவல்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் தரவுகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here