நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெறவுள்ள இந்த விசேட கலந்துரையாடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.